'பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிட தடை!

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 03:00 pm
no-pm-narendra-modi-biopic-release-before-may-19-election-commission-tells-supreme-court

பிரதமர் நரேந்திர மாேடியின் வாழ்க்கை வரலாற்றை  ஒட்டி எடுக்கப்பட்டுள்ள, ‛பி.எம்., நரேந்திர மாேடி’ திரைப்படத்தை, மே 19 வரை திரையிட தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, 'பி.எம்., நரேந்திர மோடி' என்ற பெயரில் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், பிரதமர் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். தமிழ் உட்பட 23 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீபி. எஸ்.சிங். ஏப்ரல் 11ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டனர். இப்படத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கின் விசாரணையில், இப்படத்தினை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த போதும், தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தொடர்ந்து, அதன் மேல்முறையீட்டு வழக்கில், படத்தை பார்த்து ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  'பி.எம்., நரேந்திர மோடி' படத்தை வெளியிட, மே 19ம் தேதி வரை தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியானால், அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.  

இதையடுத்து, 'பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிட, மே 19ம் தேதி வரை தடை விதித்து  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close