ஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை !

  டேவிட்   | Last Modified : 25 Apr, 2019 07:29 am
jammu-2-terrorists-killed

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் அருகே உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்திய பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close