காஷ்மீரில் நிலச்சரிவு- பேருந்து மீது பாறைகள் விழுந்ததில் 5 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Apr, 2019 12:05 pm
5-killed-9-injured-as-boulder-hits-bus-after-landslide-in-kashmir

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு, சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து மீது விழுந்தது. இதில், 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிாிழந்தனர். 

காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள தாத்ரி என்னுமிடத்தில் இருந்து கந்தோவை நோக்கி மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பியாகுல் பகுதியை கடக்கும்போது திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் சரிந்து பாறைகள் உருண்டு பேருந்து மீது விழுந்தன. 

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சியு 9 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close