வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 01:14 pm
ajayrai-as-candidate-against-pmmodi-in-varanasi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராஜ் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம்(கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று பேசப்பட்டது. 

'கட்சி சார்பில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படி நான் செயல்படுவேன்' என்றும் பிரியங்கா தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இன்று வாரணாசி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த முறை வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராஜ் என்பவர் தான் இந்தமுறையும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். 

இவர் கடந்த தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்றிருந்தார். பிரதமர் மோடி, கடந்த தேர்தலில் 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close