தலைமை நீதிபதி பாலியல் வழக்கு: சிறப்பு விசாரணைக் குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 03:14 pm
justice-ramana-recuses-from-3-judge-panel-probing-harassment-complaint-by-ex-sc-staffer-against-cji-gogoi

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க, நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக அறிவித்துள்ளார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ரோஹிந்தன் நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. 

இந்த புகார் குறித்து விசாரிக்க மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவும் அமைக்கபட்டுள்ளது. என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெறுவர் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதைத்தொடர்ந்து சிற்ப்பு விசாரணைக்குழு அதன் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னதாகவே அந்தக்குழுவில் இருந்து விலகுவதாக நீதிபதி ரமணா இன்று அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close