தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு: இரண்டு குழுக்கள் நியமித்து உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 04:48 pm
two-special-investigation-teams-are-formed-in-case-against-sc

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக எழுப்பப்படும் இரண்டு அம்சங்களை தனித்தனியாக விசாரித்தறிய ஏதுவாக இரண்டு விசாரணைக் குழுக்களை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ரோஹிந்தன் நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை அமர்வு இரண்டு விசாரணைக் குழுக்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. 

தலைமை நீதிபதி மீது உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் அளித்த புகாரின் உண்மைத்தன்மையை ஆராய, மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோரும் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெறுவர் என்று நேற்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவித்திருந்தது.இந்தக் குழுவிலிருந்து விலக விரும்புவதாக, காரணம் ஏதும் கூறாமல் நீதிபதி ரமணா இன்று அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில்,  பாலியல் புகாரின் அடிப்படையில் தலைமை நீதிபதி குறித்து துர் செய்தியை  பரப்புவதற்காகவும், பொய் வழக்காக ஜோடிக்கவும், ஓர் குழு தன்னிடம் 1.5 கோடி ரூபாய் பேரம் பேசியதாக கூறியிருந்த வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ், அதற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி வேலைகள் ஏதும் நடைபெறுகிறதா என்பது குறித்து உத்சவ் பெயினிடம் விசாரித்து அறியும் நோக்கில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையில் சிபிஐ இயக்குநர். டெல்லி தலைமைச் செயலர் மற்றும் டெல்லி தலைமைக் காவல் அதிகாரிகள் விசாரணையின்போது நீதிபதி பட்நாயக்கிற்கு  உதவி செய்ய வேண்டும் அருண் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close