புதிய 200, 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகிறது! - ஆர்.பி.ஐ அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 05:09 pm
rbi-to-issue-new-rs-200-rs-500-notes-soon

ரிசர்வ் வங்கி இயக்குனர் ஷக்திகாந்த தாஸின் கையெழுத்துடன் கூடிய, புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக ஆர்.பி.ஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியானது. மேலும், சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க புதிய 200 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ஷக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இதனால், அவரது கையெழுத்துடன் கூடிய புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், ரூபாய் நோட்டுகள் புதிய சீரியல் நம்பர்களிலும் வெளியாகவுள்ளது. 

புதிய நோட்டுகளுடன், தற்போது பயன்பாட்டில் உள்ள 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்கும் என்றும் மத்திய வங்கியான ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close