2 வயது குழந்தையின் இதயம் தானம்: 6 பேருக்கு மறு வாழ்வு 

  விசேஷா   | Last Modified : 25 Apr, 2019 06:08 pm
two-year-old-boy-donated-his-heart-and-saved-lives-of-six-people

இதய பாதிப்புக்கு உள்ளாகி, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, விழுப்புரத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவனுக்கு, மும்பையை சேர்ந்த இரண்டு வயது சிறுவனின் இதயம் பொருத்தப்பட்டதால், அச்சிறுவனுக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது. 

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இரண்டு வயதே ஆகும் அந்த குழந்தைக்கு, உடனடியாக இதய மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என, டாக்டர்கள் அறிவுருத்தினர். 

இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு வயது ஆண் குழந்தை, மூளைச்சாவு அடைந்தது. இதையடுத்து, அந்த குழந்தையின் பெற்றோர், அதன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். 

இதை அறிந்த சென்னை மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக மும்பைக்கு சென்று, அந்த குழந்தையின் இதயத்தை தானமாக பெற்று வந்தனர். மும்பையிலிருந்து, குழந்தையின் இதயம் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. 

பின் அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலம், விழுப்புரத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றி அடைந்ததால், சிறுவன் உயிர் பிழைத்தான். 

இந்த தகவல் அறிந்த, மூளைச்சாவடைந்த மும்பையை சேர்ந்த இரண்டு வயது சிறுவனின் பெற்றோர், தாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்கள் குழந்தையின் வெவ்வேறு உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம், ஆறு பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதன் மூலம், மும்பையை சேர்ந்த மூளைச்சாவடைந்த இரண்டு வயது குழந்தை, நாட்டிலேயே, மிகக் குறைந்த வயதில் இதய தானம் செய்த குழந்தை என்ற பெருமையை பெற்றுள்ளது. 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close