நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்!

  முத்துமாரி   | Last Modified : 26 Apr, 2019 03:18 pm
nirav-modi-s-bail-rejected-by-london-court

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் நீரவ் மோடியும், அவரது உறவினரான முகுல் சோக்ஷியும் லண்டனில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு ஏற்ப, லண்டன் போலீசார் கடந்த மாதம் நீரவ் மோடியை கைது செய்தனர். 

தொடர்ந்து, அவர் லண்டன் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமீன் கோரி, லண்டன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீது இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நீரவ மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், வழக்கின் அடுத்த விசாரணை மே24ம் தேதி நடைபெறும் என்றும் அதுவரை நீரவ் மோடியை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close