இந்திய போர்க்கப்பலில் பெரும் தீ விபத்து! கடற்படை அதிகாரி உயிரிழந்தார்

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Apr, 2019 05:10 pm
ins-vikramaditya-catches-fire-naval-officer-dies

கர்நாடக துறைமுகத்திற்கு வந்த இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் கர்வார் துறைமுகத்திற்கு ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்கும் முயற்சியில் லெப்டினன்ட் கமாண்டர் டி.எஸ். சவுகான் ஈடுபட்டிருந்தார்.

இந்த முயற்சியில் எதிர்பாராத விதமாக புகை சூழ்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், மயக்கமுற்ற அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துரிதமாக செயல்பட்டு கடற்படை அதிகாரிகள் பணியாற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கப்பல் 284 மீட்டர் நீளமும் 60 மீட்டர் உயரமும் கொண்டது. 40 ஆயிரம் டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, இந்திய கடற்படையில் உள்ள மிகப்பெரும் கப்பலாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close