விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியீடு! - ஆர்.பி.ஐ அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2019 11:11 am
rbi-to-issue-new-rs-20-notes-soon

வெளிர் மஞ்சள் நிறத்தில், எல்லோரா குகை புகைப்படத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியானது. மேலும், சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க புதிய 200 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து, சமீபத்திய அறிவிப்பின்படி, ரிசர்வ் வங்கி இயக்குனர் ஷக்திகாந்த தாஸின் கையெழுத்துடன் கூடிய, புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து, தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தகவல் தெரிவித்துள்ளது. இது வெளிர் மஞ்சள் (greenish-yellow) நிறத்தில் 63 mm x 129 mm என்ற அளவில்  அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 ரூபாய் நோட்டில், மஹாத்மா காந்தி மற்றும் எல்லோரா குகையின் புகைப்படம் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய நோட்டுகளுடன், தற்போது பயன்பாட்டில் உள்ள 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்கும் என்றும் மத்திய வங்கியான ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close