கவுதம் கம்பீர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2019 03:11 pm
case-against-bjp-s-gautam-gambhir-for-election-rally-without-permission

 

டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அனுமதியின்றி பிரச்சாரம் நடத்தியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்  கவுதம் கம்பீர் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த 25ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்யும் பொருட்டு பேரணியாக சென்றார். 

அந்த பேரணி காவல்துறையின் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டுள்ளது என கவுதம் கம்பீர் மீது புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் தற்போது கவுதம் கம்பீர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டெல்லி கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close