'லேஸ் சிப்ஸ்' உருளைக்கிழங்கு: குஜராத் விவசாயிகளுக்கு 'செக்' வைத்த பெப்சிகோ நிறுவனம்!

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2019 04:09 pm
pepsico-to-make-an-out-of-court-settlement-with-gujarat-potato-farmers

'லேஸ் சிப்ஸ்' தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும், காப்பீடு பாதுகாப்பு பெறப்பட்டுள்ள உருளைக்கிழங்கை அனுமதியின்றி பயிரிட்ட குஜராத் விவசாயிகள் இழப்பீடு தரவேண்டும் அல்லது எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பெப்சி நிறுவனம்  அஹமதாபாத் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது..  

'லேஸ் சிப்ஸ்' உருளைக்கிழங்கு (FC5) பெப்சி நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற விதை. பெப்சி நிறுவனத்தின் அனுமதியின்றி அதனை பயிரிட முடியாது. ஆனால், அதனை அனுமதியின்றி பயிரிட்டதாக கூறி, குஜராத் விவசாயிகள் நால்வர் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது பெப்சி நிறுவனம். 

அனுமதியின்றி உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் ரூ. 1.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

விசாரணையின் போது, பெப்சி நிறுவனம் விவசாயிகளுக்கு ஒரு 'செக்' வைத்துள்ளது. அதாவது, விவசாயிகள், ஏற்கனவே பயிரிட்ட உருளைக்கிழங்குகளை பெப்சி நிறுவனத்திடம் ஒப்படைத்து விடவேண்டும். அதுமட்டுமின்றி, பெப்சி நிறுவனத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும். காப்புரிமை பெற்ற விதைகளை வாங்கி, உருளைக்கிழங்குகளை பயிரிட்டு கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஆயிரக்கணக்கில் விவசாயிகள் எங்களுக்காக பணியாற்றுகின்றனர். இதை செய்யமுடியவில்லை என்றால் எங்களது காப்புரிமை பெற்ற விதைகளை பயிரிடமாட்டோம் என்று கையெழுத்திட்டு கொடுங்கள். நீங்கள் வேறு ரக உருளைக்கிழங்குகளைப் பயிரிட்டுக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ஆலோசித்துதான் முடிவெடுக்கிறோம். அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று விவசாயிகள் தரப்பு கேட்க வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close