மகாராஷ்டிராவில் 2 பெண் நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2019 04:41 pm
maharashtra-two-women-naxal-were-shot-dead-in-an-encounter-in-bhamragad-area-of-gadchiroli-district

மகாராஷ்டிரா மாநிலத்தில், நக்சல் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பெண் நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி என்ற மாவட்டத்தில் உள்ள பாமரகாட் நகரில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு செனற்னர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், 2 நக்சல் தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

துப்பாக்கிச் சண்டையை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close