அவதூறு வழக்கில், ராகுல் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2019 05:39 pm
a-patna-court-summons-congress-president-rahul-gandhi-to-appear-before-it-on-may-20

பாஜக மூத்த தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி நேரில் ஆஜராகுமாறு பாட்னா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "இந்தியாவில் மோசடி செய்தவர்கள், திருடர்கள் பெயர்கள் எல்லாம் 'மோடி' என்ற பெயரில் தான் முடிகிறது. நீரவ் மோடி, லலித் மோடி.. நரேந்திர மோடி?" என்று பேசியுள்ளார். 

இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தி பேசியுள்ளது எங்களை காயப்படுத்தியுள்ளது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்துள்ளார். 

இந்த மனுவின் மீதான இன்றைய விசாரணையில், ராகுல் காந்தி வருகிற மே 20ம் தேதிக்குள்ளாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு பாட்னா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close