இது எங்கள் சொத்து...வடிவேலு பாணியில் அரசு பேருந்தை விற்ற சகோதரர்கள் கைது!

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Apr, 2019 01:03 pm
stolen-in-telangana-rtc-bus-found-dismandled-in-maharashtra-scrap-yard

ஐதராபாத்தில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசு பேருந்தை திருடி சென்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காயிலான் கடையில் விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பேருந்து நிலையத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்று கடந்த 24ஆம் தேதி திடீரென காணாமல் போனது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது இரண்டு இளைஞர்கள் அந்த பேருந்தை திருடி சென்றது தெரிய வந்தது. 

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பேருந்தை திருடிய சகோதரர்களை கைது ‌செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடிய பேருந்தை மஹாராஷ்டிர மாநிலம் ‌நன்தட் என்ற இடத்தில் உள்ள காயலான் கடையில் விற்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து காயலான் கடைகாரர் முகமது நவீத் மற்றும் பரூக் ஆகிய இருவரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சகோதரர்கள் மீது அம்மாநிலத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவயைில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close