ஆமதாபாத்: எச்சில் துப்பியதற்காக ரூ.100 அபராதம்

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Apr, 2019 04:43 pm
in-first-case-of-fine-for-spitting-pan-masala-on-road-civic-body-in-ahmedabad-collects-rs-100-from-man

பொது இடத்தில் பான் மசாலா எச்சிலைத் துப்பியதற்காக, ஆமதாபாதில் ஒரு நபருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இந்தவகையில் விதிக்கப்பட்ட முதல் அபராதம் இதுதான் என்று ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை சாலையின் அருகே, பான் மசாலா எச்சிலைத் துப்பியதற்காக, மகேஷ் குமார் என்ற நபருக்கு, சிசிடிவி காட்சியின் ஆதார அடிப்படையில் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பொது சுகாதார சட்டத்தை மீறியதன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய அளவிலான சுகாதார சர்வேயின் அடிப்படையில், நாட்டிலேயே சுத்தமான நகரமாக ஆமதாபாத் நகரம் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close