ஃபனி புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Apr, 2019 11:47 am
pm-modi-asks-officials-to-take-preventive-measures-as-cyclone-fani-likely-to-intensify-near-tamil-nadu-andhra-pradesh

வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள ஃபனி புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள ஃபனி புயல் நாளை அல்லது நாளை மறுநாள் மிகவும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பானி புயல் தாக்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் மக்களின் பாதுகாப்புக்காகவும் தான் கடவுளிடம் வேண்டிக்கொள்வதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close