டெல்லி: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Apr, 2019 01:21 pm
fire-breaks-out-at-a-chemical-factory-in-delhi

டெல்லியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

டெல்லியில்  உள்ள நரைனா பகுதியில் ஏராளமான இரும்பு மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது.  மேலும் சில ரசாயன தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று காலையில் அங்குள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயைணப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீவிபத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close