திருமண நாளில் சாலை விபத்து- மணப்பெண் உள்பட 4 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Apr, 2019 01:52 pm
bride-3-others-killed-as-suv-carrying-newlyweds-collides-with-combine-in-ludhiana

ஹரியானா மாநிலத்தில் இருந்து அம்ரிஸ்தர் நகருக்கு சென்று கொண்டிருந்த ஜீப், சாலையில் நின்ற கதிர் அறுக்கும் இயந்திரத்தின் பின்புறம் மோதிய விபத்தில் அதில் பயணம் செய்த மணப்பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஹரியானா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தையடுத்து மணமகனின் ஊரான அமரிஸ்தருக்கு மணமக்கள் உள்பட அவர்களது உறவினர்கள் ஒரு ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர்.

இன்று காலை புதுடெல்லி- அம்ரிஸ்தர் தேசிய நெடுஞ்சாலையில் தாண்தரி கலான் என்ற இடத்திற்கு அருகே அவர்களது ஜீப் வந்து கொண்டிருந்த போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவடை இயந்திரம் மீது ஜீப் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மணப்பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான அடுத்த நாளே மணமகள் விபத்தில் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close