ஒரு முறை அல்ல.. இருமுறை... பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து  உயிர்தப்பிய இந்தியர் !

  கிரிதரன்   | Last Modified : 29 Apr, 2019 09:21 pm
dubai-man-who-survived-sri-lanka-bombings-was-present-in-mumbai-during-26-11

இலங்கையில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின்போது மயிரிழையில் உயிர்தப்பிய இந்தியர் ஒருவர், 2008 -இல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலின்போதும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது தற்போது தெரிய வந்துள்ளது.

துபாயில் குடும்பத்துடன் வசித்துவரும் இந்தியரான அபிநவ் சாரி, தொழில் நிமித்தமாக தமது மனைவியுடன் அண்மையில் இலங்கைக்கு சென்றுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சின்னம்மன் நட்சத்திர ஹோட்டலில் இருவரும் தங்கியிருந்துள்ளனர்.

ஈஸ்டர்  தினத்தன்று அபிநவும், அவரது மனைவி நவ்ரூப்பும் கொழும்பில் உள்ள ஓர் தேவாயத்துக்கு சென்று, அங்கு நடைபெற்ற சிறப்பு வழிப்பாட்டில் பங்கேற்றுள்ளனர். ஈஸ்டர் தின  வழிபாடு முடிந்ததும், விரதத்தை முடித்துக் கொள்வதன் அடையாளமான காலை உணவு அருந்துவது கிறிஸ்தவர்களின் வழக்கமாம்.

அதன்படி, இருவரும் வாடகை காரில் ஏறி, சிற்றுண்டி உண்ண  ஏதாவதொரு ஹோட்டலுக்கு செல்லும்படி டிரைவரிடம்  கூறியுள்ளனர். அவர்கள் காரில் பயணித்து கொண்டிருந்தபோது, கொழும்பு நகர வீதிகள்தோறும் பதற்றம் பற்றிக் கொண்டிருந்ததை அவர்களால் உணர முடிந்துள்ளது. உடனே, காரை தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு திரும்பும்படி கூறியுள்ளனர்.

அங்கும் ஒரே பதற்றம். அறைகளில் இருந்தவர்கள் அனைவரும்  ஹோட்டலுக்கு வெளியே ஒருவித படபடப்புடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது தான், தாங்கள் சென்று வழிப்பட்டு திரும்பிய தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதை இத்தம்பதி அறிந்துள்ளனர்.

"பாதிரியாரின் சொல்படி, சிற்றுண்டி உண்பதற்காக நாங்கள் தேவாலயத்திலிருந்து  புறப்பட்டோம். அப்படி செய்யாமல், இன்னும் சிறிது நேரம் நாங்கள் அங்கேயே இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? நினைத்து பார்த்தாலே நெஞ்சம் பதைபதைக்கிறது. இங்கு நிகழ்ந்தவையெல்லாம் ஏதோ சினிமாவில் வரும் காட்சிகளை போல் உள்ளன" என்று, தழுதழுத்த குரலில் கூறினார் நவ்ரூப்.

"நான் தொழில்நிமித்தமாக,  ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியே இரண்டு முறை தான் பயணித்துள்ளேன். இரண்டு முறையும் பயங்கரவாத தாக்குதலின் கொடுமைகளை கண்கூடாக அனுபவித்துள்ளேன்.

மருத்துவம் படிப்பதற்காக, கடந்த 2008 -இல் மும்பைக்கு வந்திருந்தேன். அப்போது அங்கு தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தினர். அப்போது முதல்முறையாக பயங்கரவாதத்தின் கொடுமைகளை கண்கூடாக கண்டனேன். மும்பையில் தங்கியிருந்த அந்த  ஆறு நாட்களை இப்போது நினைத்தாலும், நெஞ்சில் நெருப்பை அள்ளி போட்டதை போல் உணர்கிறேன். 

தற்போது கொழும்பில் நிகழ்த்தப்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்பின் மூலம் பயங்கரவாதத்தின் கோரமுகத்தை மற்றொரு முறை நேரடியாக கண்டுள்ளேன். அத்துடன், இத்தாக்குதலில் இருந்து நானும், என் மனைவியும் மயிரிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளோம்" என அபிநவ் சாரி கண்ணீர் மல்க கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close