இமயமலையில் பனிமனிதனின் கால் தடத்தின் படத்தை ராணுவம் வெளியிட்டுள்ளது

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Apr, 2019 01:25 pm
yeti-footprints-sighted-by-expedition-team-tweets-indian-army

நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் எட்டி எனப்படும் பனி மனிதனின் கால் தடத்தை இந்திய ராணுவத்தினர் படம் பிடித்துள்ளனர்.

இமயமலையில் எட்டி  எனப்படும் ராட்சத பனி மனிதன் இருப்பதாக பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. அதனை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அங்கு மர்மமான கால்தடங்களை இந்திய ராணுவத்தினர் கண்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், 32 அங்குல நீளமும் 15 அங்குல அகலமும் கொண்ட அளவிலான மர்மமான கால்தடத்தை ராணுவ வீரர்கள் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நேபாளத்தில் உள்ள மகாலு அடிவாரத்தில் பனி மனிதனின் கால்தடம் காணப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

மேலும், பனி மனிதன் மகாலு - பாருன் தேசிய பூங்கா அருகில் ஏற்கனவே காணப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

காணப்பட்ட காலடி தடம் ஓற்றை காலடி போல் உள்ளது என்றும் அது திபெத் பிரவுன் கரடி அல்லது ஹிமாலயன் பிரவுன் கரடியின் காலடிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close