ஃபனி புயல்: 4 மாநிலங்களுக்கு ரூ. 1086 கோடி ஒதுக்கீடு

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 01:16 pm
fani-cyclone-rs-1086-crore-released-for-4-states

வங்கக் கடலில் உருவாகியுள்ள, ஃபனி புயல், ஒடிசா, ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆந்திரா, ஒடிசா, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள, 1086 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல் நாளை, ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, கன மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், ஒடிசா, ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக, புயலால் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், புயல் தாக்கியதும், உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் சேர்த்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், 1086 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதில், தமிழகத்திற்கு மட்டும், 309 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close