பாக்., சிறையில் வாடிய 55 இந்திய மீனவர்கள் விடுதலை

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2019 02:04 pm
55-indian-fishermen-released-from-pakistan-jail

அரபிக் கடல் பகுதியில் மீன் பிடித்த போது, தவறுதலாக பாக்., கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் 55 பேர் அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் அந்நாட்டு அரசு நேற்று விடுவித்தது. 55 மீனவர்களும், இன்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர். 

ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள், அரபிக்கடலில் மீன் பிடிப்பது வழக்கம். அப்படி மீன் பிடித்த போது, தவறுதலாக, இந்திய எல்லையை கடந்து, பாக்., கடல் எல்லைக்குள் நுழைந்ததாக, நம் நாட்டை சேர்ந்த மீனவர்கள், 55 பேரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைந்தனர். 

இவர்களை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பலனாக, பாக்., சிறையில் வாடிய, நம் நாட்டு மீனவர்கள் 55 பேர், நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், இன்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close