ஹிந்தி நஹி மாலும் ஹை: 10 லட்சம் மாணவர்கள் பெயில்!

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 05:22 pm
10th-board-exam-result-10-lakh-students-fail-in-hindi

உத்தர பிரதேச மாநில பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஹிந்தி மாெழி பாடத்தில் மட்டும், ஏறக்குறைய, 10 லட்சம் மாணவர்கள் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் கூட பெற முடியாமல், தோல்வி அடைந்துள்ளனர். 

உத்தர பிரதேச மாநில கல்வித்துறையின் சார்பில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில், 29 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். 

அவர்களில் 20 சதவீதம் பேர், தங்கள் தாய் மாெழியான, ஹந்தி மொழிப் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.

அதாவது, 10ம் வகுப்பு ஹிந்தி மாெழிப்பாடத் தேர்வில், 5.74 லட்சம் மாணவர்கள் பெயில் ஆகியுள்ளனர். அதே போல், 12ம் வகுப்பு ஹிந்தி மாெழிப்பாடத்தில், 1.93 லட்சம் மாணவர்களும், பொது ஹிந்தி பாடத் தேர்வில், 2.3 லட்சம் மாணவர்களும் பெயில் ஆகியுள்ளனர். 

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், அந்த மாநிலத்தில் வசிக்கும் பெரும்பாலான மாணவர்களின் தாய் மாெழியான ஹிந்தி பாடத்தில், மொத்தம், 10 லட்சம் மாணவர்கள் பெயில் ஆகியிருப்பது, அந்த மாநில கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அதே போல், 10ம் வகுப்பு ஆங்கில மாெழி பாடத்தில், 5.3 லட்சம் மாணவர்களும், கணிதத்தில், 5.1 லட்சம் மாணவர்களும் பெயில் ஆகியுள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என, அந்த மாநில கல்வித்துறை உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close