மகாராஷ்டிரம்: நக்ஸல்களின் தாக்குதலில் 16 வீரர்கள் பலி

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 05:55 pm
naxal-attack-in-maharastra-15-security-persons-killed

மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனம் மீது நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 16 வீரர்கள் பலியாகினர்.

கட்சிரோலி அருகே ஜம்போர்கேதா, லேன்தாரி ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதில், கட்சிரோலி காவல்துறையில் உள்ள அதிவிரைவு படையைச் சேர்ந்த ஓட்டுநர் உள்பட 16 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தாக்குதலை நடத்திய எவரும் தப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோரும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close