புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஒடிசாவில் உயிரியல் பூங்கா மூடல்

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 07:06 pm
fani-cyclone-nandankanan-zoological-park-in-bhubaneswar-to-be-closed

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல், வரும் 3ம் தேதி, ஒடிசாவை தாக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், அங்குள்ள உயிரியல் பூங்காவை தற்காலிகமாக மூட, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனி  புயல், வரும் 3ம் தேதி, ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு, 200 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், புரி கடற்கரை அருகே உள்ள தனியார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள நந்தன்கனான் உயிரியல் பூங்காவை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அங்குள்ள முக்கிய விலங்குகளை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு கொண்டு சென்று, புயல் பாதிப்புகள் முடிந்த பின், சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் அவற்றை பூங்காவில் அடைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close