சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமல்

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 07:39 pm
cylinder-rate-hike

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை சிறிது அதிகரித்துள்ளது. மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.484.02 ஆக உள்ளது.

மானிய விலை சிலிண்டரின் விலை 30 பைசா அதிகரிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. அந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் சிலிண்டரின் மொத்த அடக்க விலை ரூ.728 ஆக உள்ளது. இதில், பயனாளிகளுக்கு கிடைக்கும் மானியம் போக, சிலிண்டரின் விலை ரூ.484.02 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ.6 அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கான மானியத் தொகை, அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close