மிரட்டும் ஃபனி புயல்: 103 ரயில்கள் ரத்து

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 10:56 pm
103-trains-cancelled-due-to-fani-cyclone

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேலும் 22 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை, 103 ஆக உயர்ந்துள்ளது. 

மிரட்டும் ஃபனி புயல், வரும் 3ம் தேதி, ஒடிசாவில் கரையை கடக்கிறது. இதன் காரணமாக, ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மார்க்கமாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்குமு் போது 200 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், ஏற்கனவே, 81 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. 

இந்த நிலையில், மேலும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், மொத்தம் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை, 103 ஆக உயர்ந்துள்ளது. புயல் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில், பொதுமக்கள் தங்கள் தனி வாகனங்களிலும் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close