தேர்தல் பிரசாரத்தின்போது நிதின் கட்காரிக்கு உடல் நலக்குறைவு

  டேவிட்   | Last Modified : 02 May, 2019 07:40 am
doctors-examined-nithin-katkari

தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பின்னர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர். 

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கின்னனூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று (1ஆம் தேதி) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு  இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவக்குழுவினர் விரைந்து வந்து நிதின் கட்காரிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். பின்னர் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close