ஃபனி புயல் - ஒடிஸாவில் 8 லட்சம் பேர் வெளியேற்றம்

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 11:44 am
over-8-lakh-people-evacuated-in-odisha-rescue-teams-on-alert

ஃபனி புயல் கரையைக் கடப்பதை முன்னிட்டு, ஒடிஸா மாநிலத்தில் ஆபத்து மிகுந்த பகுதிகளில் இருந்து 8 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ஒடிஸா பேரிடர் அதிரடி செயற்பாட்டுக்குழு, தீயணைப்புப் படை உள்ளிட்ட பல்வேறு துருப்புகளின் வீரர்கள், மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். ஃபனி புயல் நாளை கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒடிஸா தலைவர் புரி அருகே 500 கி.மீ. தொலைவில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள இந்தப் புயல் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close