காங்கிரசும்-பாஜகவும் ஒரே கொள்கை உடையவை: அகிலேஷ் யாதவ் பேட்டி

  ஸ்ரீதர்   | Last Modified : 02 May, 2019 12:34 pm
akilesh-yadav-on-congress-and-bjp

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆதாயம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளதற்கு அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தொிவித்துள்ளாா்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இதனிடையே இன்று தனியாா் செய்தி நிறுவனத்துக்கு அகிலேஷ் யாதவ் பேட்டியளித்தாா். அப்போது பேசிய அவா், உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆதாயம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

இதை நாங்கள் நம்ப முடியாது. எந்த ஒரு அரசியல் கட்சியும் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தாது. காங்கிரஸ் கட்சியும் உத்தரப்பிரதேசத்தில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தவும் இல்லை. காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்றாா்.

மேலும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒரே கொள்கை உடையவை. இரண்டுமே சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய ஏஜென்சிகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றன என்று தொிவித்தாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close