சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 12:51 pm
cbse-results-released

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ-யின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள உள்ள சுமார் 31 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். 

இந்நிலையில், மே மாதம் 3ம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்திருந நிலையில், இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.nic.in, cbseresults.nic.in ஆகியவற்றில் காணலாம். 

மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close