சந்திராயன்- 2 செயற்கைக்கோள் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ

  ஸ்ரீதர்   | Last Modified : 02 May, 2019 03:00 pm
india-to-launch-chandrayaan-2-in-2nd-week-of-july

சந்திராயன்-2 செயற்கைக்கோள் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திராயன்-I விண்கலத்தை 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திராயன்-II விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது

இதன்படி, சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த முதலில் திட்டமிடப்பட்ட போது, பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்ரோ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சந்திராயன் -2 திட்டம் இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கியமான திட்டமாகும். இதனால் மிகவும் எச்சரிக்கையாக விண்ணில் செலுத்த உள்ளோம் என்றும் சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலை 9 - 16க்கு இடைப்பட்ட நாட்களில் விண்ணில் செலுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close