பாம்புகளுடன் விளையாடும் பிரியங்கா காந்தி; வைரலாகும் வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 06:04 pm
priyanka-plays-with-snake-charms-onlookers

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாம்புகளுடன் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் பிரியங்கா காந்தி, மக்களை சந்தித்து உரையாடினார். அங்குள்ள பாம்பாட்டிகளை சந்தித்து பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அந்த சமயத்தில் அவர்கள் கையில் வைத்திருந்த பாம்புகளை அசால்ட்டாக தூக்கினார். மேலும், அதெல்லாம் எவ்வகையான பாம்புகள் என்று அவர்களிடம் கேட்டறிந்தார். அவர் பாம்புகளுடன் விளையாடிய அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

— S. Imran Ali Hashmi (@syedimranhashmi) May 2, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close