காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 11:46 am
indian-media-report-ceasefireviolation-in-shahpur-and-kirni-sectors-on-the-loc-in-poonch-district-on-thursday

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் செக்டாரில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டார் பகுதியில் ஷாபூர், கெர்னி ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினரும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், கெர்னி செக்டாரில் 5 கிமீ சுற்றளவுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காஷ்மீர் சோபியான் மாவட்டத்திலும், பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தெற்கு காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close