மசூத் அசாரின் சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 11:48 am
pak-issues-order-to-freeze-assets-impose-travel-ban-on-masood-azhar

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. 

புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய அரசு, ஐ.நாவிடம் வலியுறுத்தி வந்தது. பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, இதற்கான தீர்மானம் ஐ.நாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இது உலக நாடுகளின் தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளன. 

சர்வதேச பயங்கரவாதிகயாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மசூத் அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close