பினாமி சொத்துகள், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 12:57 pm
sc-accepts-plea-for-consecutive-sentence-to-convicts-under-uapa-pca-pmla-benami-property-laws

பினாமி சொத்துகள் மற்றும் கருப்புப் பணம் வைத்திருக்கும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. வருகிற மே 10ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967, ஊழல் தடுப்பு சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம், பினாமி சொத்து பரிவர்த்தனை தடை செய்தல் ஆகியவற்றின் கீழ், பினாமி சொத்துகள் மற்றும் கருப்பு பணம் வைத்திருக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. 

பாஜக தலைவர் மற்றும் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யே இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றமும் இந்த மனுவை ஏற்றுக்கொண்டு வருகிற மே 10ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close