ஆந்திராவில் தேர்தல் விதிமுறைகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம்!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 03:36 pm
cyclone-fani-ec-relax-model-code-of-conduct-in-4-andhra-pradesh-districts-for-relief-work

ஃபனி புயலின் தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ள ஆந்திராவின் 4 பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, அங்கு தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. 

அதி தீவிர புயலான ஃபனி புயல் ஒடிசா மாநிலம் புரி அருகே இன்று கரையைக் கடந்தது. தொடர்ந்து, இந்த புயல் மேற்கு வங்க மாநிலம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்தன. போக்குவரத்து, மின்சேவை, தொலைத்தொடர்பு சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த புயல் ஆந்திராவின் சில பகுதிகளையும் தாக்கியுள்ளது. அதன்படி, ஆந்திராவின் புயலால் பாதிக்கப்பட்ட  கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், விழிநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய 4 மாவட்டங்களில்  நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு, அங்கு தேர்தல் விதிகளை தளர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close