கேரள நடிகை பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத்தடை! - உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 06:10 pm
actress-assault-as-dileep-approaches-sc-kerala-govt-must-clarify-this-question

கேரள நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல மலையாள நடிகர் திலீப்பின் அறிவுறுத்தலின் பேரில் தான் நடிகையை கடத்தியதாக, முக்கிய குற்றவாளி வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக ஒரு பெண் டிரைவில், நடிகை கடத்தப்பட்ட மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த பென்டிரைவில் உள்ள காட்சிகளில் ஒரு நகல் தனக்கு வேண்டும் என்று நடிகர் திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.  ஆனால் அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 

இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். உச்ச நீதிமன்றம், கேரள அரசிடம் அந்த பென்டிரைவ் தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளது. அதாவது இந்தக் குற்றச்சம்பவம் பதிவு செய்யப்பட்டு பென்டிரைவில் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதா அல்லது பென்டிரைவில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய ஆவணங்களாக உள்ளதா?  என்று விளக்கமாக பதிலளிக்குமாறு கேரள மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதனை நடிகர் திலீப்புக்கு ஒரு நகல் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close