ஃபனி புயல் பாதிப்பில் சிக்காமல் 11 லட்சம் பேர் மீட்பு: பேரிடர் மீட்புப் படைக்கு பாராட்டு!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 06:20 pm
11-lack-peoples-rescued-from-fani-cyclone-in-odisha

வங்கக் கடலில் உருவான ஃபனி புயலில் சிக்காமல், 11 லட்சம் பேரை பத்திரமாக மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளதாக, தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இவர்களின் பெரு முயற்சியால், உயிர் பலி பெரிதளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. மிக துல்லியமாக திட்டமிட்டு, அதை சரியாக செயல்படுத்தியதன் மூலம், லட்சக்கணக்கான உயிர்களை மீட்ட மீட்பு குழுவினருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், இன்று காலை, ஒடிசா மாநிலம் கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சில மாவட்டங்களில், மிக கனத்த மழை, கன மழை பெய்து வருகிறது. 

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது:
சாதாரணமாக, இந்தியா மற்றும் அதை சுற்றியுள்ள ஆசிய நாடுகளில், அக்டோபர் முதல் டிசம்பவர் வரையிலான காலங்களில் தான் புயல் தாக்கம் காணப்படும். குறிப்பாக, வங்கக் கடலில் இந்த காலங்களில் தான் புயல் உருவாவது வழக்கம். 

மிக அரிதாகவே, ஏப்ரல் - மே மாதங்களில் புயல் உருவாகி அது கரையை கடக்கும். அந்த வகையில் தான், தற்போது, வங்கக் கடலில் உருவான காற்றத்தழு தாழ்வு மையம், புயலாக மாறி, ஒடிசாவில் கரையை கடந்து, மேற்கு வங்கம் வழியாக வங்க தேசத்தை சென்றடைகிறது. 

கடந்த, 52 ஆண்டுகளில், வங்கக் கடல் பகுதியில், ஏப்., - மே மாதங்களில் இதுவரை, ஒன்பது முறை மட்டுமே புயல் உருவாகியுள்ளது. இதற்கு முன், 1968, 1976, 1979, 1982, 1997, 1999, 2001 மற்றும் 2004ம் ஆண்டுகளில் இதுபோன்ற புயல் உருவானது. ஆயினும், இதற்கு முன் ஏற்பட்ட புயல்களை விட, இப்போது ஏற்பட்டுள்ள புயல் அதிக வேகத்துடன் காணப்பட்டது. 
1891 முதல் 20017 வரை, ஏப்., - மே மாதங்களில் வங்கக் கடலில்,  14 புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன. அதன் பின் தற்போது தான் இந்த புயல் உருவாகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை தாக்கியுள்ளது. 

புயல் கரையை கடக்கும் போது, 175 - 200 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஏற்கனவே, மத்திய, மாநில அரசுகள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால், பெரிய அளவிலான உயிர் பலி தவிர்க்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, பொதுமக்கள் கூறியதாவது: 
ஒடிசாவின் எந்தெந்த பகுதிகளில் புயல் பாதிப்பு ஏற்படும் என முன்கூட்டியே அரசு அதிகாரிகள் கணித்துவிட்டனர். வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் அறிவுருத்தலின் பேரில், அவர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட, 11 மாவட்டங்களை சேர்ந்த, 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கை, பேரிடர் மீட்பு படையினரின் துடிப்பான செயல்பாடுகளால், பெரிய அளவிலான உயிர் பலி தவிர்க்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் அதிகம் இருந்தபோதும், பெரிய அளவில் உயிர் இழப்பு நேரவில்லை என்பது பாராட்டத்தக்கது. இது, பேரிடர் மேலாண்மையில், நம் நாடு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது. 

ஏற்கனவே, தமிழகத்தில் வீசிய கஜா புயலின் போதும், இயற்கையின் சீற்றத்தால், பொருட் சேதம் ஏற்பட்டாலும், அதிகப்படியானோர் உயிரிழக்கவில்லை. தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, லட்சக்கணக்கானோரை மீட்ட வீரர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close