125 நாள்கள்; 27 மாநிலங்கள்; 200 நிகழ்ச்சிகள் - பிரதமர் மோடியின் அசாத்திய உழைப்பு !

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 09:32 pm
pm-s-travel-itinerary-in-last-125-days-200-programmes-across-27-states-and-union-territories

பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு -காஷ்மீர் தொடங்கி, கேரளா வரை மொத்தம் 27 மாநிலங்களில், அரசு விழாக்கள், தேர்தல் பிரச்சாரங்கள் என, கடந்த 125 நாட்களில் மொத்தம் 200 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாக, அவரது அதிகாரப்பூர்வ இணையதளமான www.narendramodi.in -தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுநாள்வரை, டெல்லியில், 14 அமைச்சரவை கூட்டங்கள் உள்பட 30 ஆலோசனைக் கூட்டங்களை பிரதமர் மோடி தமது தலைமையில் நடத்தியுள்ளார்.

ஒருநாள் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம்,  ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு மோடி சென்றார். அங்கு ஒரே நாளில் லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

 உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த கும்பமேளா விழாவில், பிப்ரவரி 24 ஆம் தேதி பங்கேற்று, அங்கு புனித நீராடினார். இதன் மூலம், கும்பமேளாவில் பங்கேற்ற முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். முன்னதாக, ஜனவரி மாதம், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அவர் விஜயம் செய்தார்.

தமது சொந்த மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு, கடந்த 5 மாதங்களில் ஐந்து முறை மோடி வருகை தந்துள்ளார். மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, மார்ச்  4 -ஆம் தேதி, அமேதியில் ஏ.கே -203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் தொடங்கி வைத்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close