வலுவிழந்து வரும் ஃபனி புயல்!

  அனிதா   | Last Modified : 04 May, 2019 10:11 am
weakened-fani-storm

ஃபனி புயல் வலுவிழந்த நிலையில் மேற்கு வங்கத்தின் கங்கை சமவெளி பகுதியில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் தற்போது வலுவிழந்த நிலையில் மேற்குவங்கத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், கொல்கத்தாவில் இருந்து வடமேற்கே 60.கி.மீ தொலைவில் நகர்ந்து வரும் ஃபனி புயல் நண்பகல் வங்கதேசம் நோக்கி நகர்ந்து வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close