புயல் பாதிப்புகளை பார்வையிட ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி!

  அனிதா   | Last Modified : 04 May, 2019 10:45 am
pm-modi-goes-to-odisha

ஃபனி புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார்.

வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் ஒடிசா மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், புயலால் பல்வேறு வீடுகள், வாகனங்கள், மரங்கள், மின்கம்பங்கள் என பல சேதமடைந்துள்ளன. 

இந்நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஒடிசா முதலமைச்சரிடம் தொலைபேசி வழியாக கேட்டறிந்தார். இதை தொடர்ந்து நாளை மறுநாள் (மே.6) புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட பிரதமர் மோடி ஒடிசா செல்லவுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close