ரஃபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: மத்திய அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 04 May, 2019 12:40 pm
rafale-defence-deal-centre-files-affidavit-against-review-petition

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. 

ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்து வருகிறது. ரஃபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த 2018 டிச.14ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த விவகாரத்தில் புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கும் படி மத்திய அரசு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கால அவகாசமும் வழங்கப்பட்டது. 

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய  பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், "ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது தான். தகவல் மீடியாக்களில் வெளியான ஒரு சில தகவல்களை அடிப்படையாக கொண்டு மட்டும் மறு ஆய்வு செய்யக் கூடாது. 

புதிய ஒப்பந்தத்தின் படி, ரஃபேல் போர் விமானத்தின் விலை 2.86% குறைவாக உள்ளது என்று மத்திய தணிக்கை வாரியமே கூறியுள்ளது. எனவே ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை" என பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close