நீரஜ் சோப்ரா விரைவில் குணமடைவார்: பிரதமர் மோடி ட்வீட்!

  Newstm Desk   | Last Modified : 04 May, 2019 03:11 pm
pm-narendra-modi-wishes-for-neeraj-chopra-s-speedy-recovery-post-elbow-surgery

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா முழங்கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதையடுத்து,  அதையறிந்த பிரதமர் நரேந்திர மோடி, சோப்ரா விரைவில் மீண்டு வர இறைவனிடம் பிரார்த்திப்பதாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

ஈட்டி எறிதலில் முன்னணி வீரரான நீரஜ்  சோப்ரா ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். சமீபத்தில் இவரது வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்றார்.

முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால், மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர் நேற்று முன்தினம் மும்பையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதிலிருந்து அவர் முழுமையாக குணமடைய 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் தோஹாவில் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பாக நீரஜ் சோப்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில், "விரைவில் நான் மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். இதற்கு பிரதமர் மோடி, "நீங்கள் வலிமையான இளைஞர். உங்களால் இந்தியா தொடர்ந்து பெருமைப்படுகிறது. நீங்கள் விரைவில் குணமடைய இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close