கார் விபத்தில் சிக்கிய பாஜக வேட்பாளர்!

  Newstm Desk   | Last Modified : 04 May, 2019 04:23 pm
bengal-bjp-candidate-hospitalised-after-suv-rams-into-his-car

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் ஒருவர் இன்று, கார் விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் போங்கோன்(Bongaon) மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாந்தனு தாகூர் என்பவரது கார் இன்று விபத்துக்குள்ளானது. ஜகுலியா(Jagulia) என்ற இடத்திற்கு அருகே, சாலையின் எதிர்ப்புறமிருந்து வந்த எஸ்.யு.வி வாகனம் ஒன்று, தாகூர் பயணம் செய்த காரின் மீது மோதியுள்ளது. 

இதில் படுகாயமடைந்த சாந்தனு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், சாந்தனுவின் உதவியாளர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து நடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close