ராமாயணத்தை இழிவுபடுத்தியதாக கம்யூனிஸ்ட் தலைவர் மீது புகார்

  Newstm Desk   | Last Modified : 04 May, 2019 04:22 pm
complaint-against-seetharam-yechuri-for-his-speech-against-ramayana-and-mahabharatha

ஹிந்துக்களின் புனித நுாலான ராமாயணம், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு எதிராக, யோகா குரு பாபா ராம் தேவ் தலைமையில், சன்னியாசிகள் பலர் சேர்ந்து, ஹரித்துவாரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, ஹிந்துக்களின் புனித நுாலான, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை தெரிவித்தார். இந்த இரு நுால்களும் வன்முறையை போதிப்பதாகவும், அதில் போர் குறித்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், அதை பின்பற்றும் ஹிந்துக்கள் எப்படி சமாதானத்தை விரும்புவர் எனவும் கேள்வி எழுப்பினார். 

யெச்சூரியின் இந்த பேச்சுக்கு, ஹிந்துக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஹரித்துவாரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், யோகா குரு பாப ராம்தேவ் தலைமயில், சன்னியாசிகள் பலரும், யெச்சூரிக்கு எதிராக புகார் மனு அளித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close