ராமாயணம் குறித்த சர்ச்சை பேச்சு : கம்யூனிஸ்ட் தலைவர் மீது வழக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 05 May, 2019 11:55 am
fir-registered-against-yechury

ஹிந்துக்களின் இதிகாச நூல்களான ராமாயணம், மகாபாரதத்தை இழிவுப்படுத்தி பேசியதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது, ஹித்துவார்  போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம்,  ஹித்துவாரில் இரு தினங்களுக்கு முன்பு சீதாராம் யெச்சூர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த இரு நுால்களும் வன்முறையை போதிப்பதாகவும், அதில் போர் குறித்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், அதை பின்பற்றும் ஹிந்துக்கள் எப்படி சமாதானத்தை விரும்புவர்" எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

யெச்சூரியின் இக்கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக,  யோகா குரு பாபா ராம் தேவ் தலைமையில் சன்னியாசிகள் பலர் சேர்ந்து, யெச்சூரிக்கு எதிராக, ஹரித்துவாரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படை அவர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close