ராஜிவ் காந்தி ஒன்றாம் நம்பர் ஊழல்வாதியாக இறந்தார் : பிரதமர் மோடி ஆவேசம்

  ஸ்ரீதர்   | Last Modified : 05 May, 2019 12:01 pm
prime-minister-narendra-modi-launched-a-blistering-attack-on-rahul-gandhi

மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி ஒன்றாம் நம்பர் ஊழல்வாதியாக உயிரிழந்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் பிரதமர் மோடி நேற்று, தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியை அவரது கட்சியினர் உத்தமர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் ஒன்றாம் நம்பர் ஊழல்வாதியாக உயிரிழந்தார்.

மத்திய பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு,  ரஃபேல் ஊழல் என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் தங்க கரண்டியோடு பிறந்தவன் இல்லை.

என்னுடைய புகழை கெடுக்க காங்கிரஸ் கட்சி என்னைப் பற்றி பொய்யான அவதூறுகள் தெரிவித்து வருகின்றது. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரசுடன் ரகசிய தொடர்பில் உள்ளன. அனைவரும் இணைந்து என் மீது அவப்பெயர் உண்டாக்க முயல்கின்றனர்.

அது மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னையும், தனது குடும்பத்தையும் நேர்மையானவர்கள் என மக்கள் மத்தியில் காட்டிக் கொள்ள, என் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அவருடைய தந்தை ஊழல்வாதியாக இறந்தார் என்பதை மறந்துவிட்டு அவர் பேசுகிறார்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close